2011/05/31


என் உயிரே உன்னிடம் நான் கேட்பது ஒன்றே தான்... 

இதுவரை உன்னால் என் இமைகள் நனையவில்லை... 
என்னிடம் உன்னை தருவாய் என்ற நம்பிக்கையில்... 

எந்தன் மனதில் கண்ணீர் சுமையுமில்லை 
என்னை விட்டு நீ பிரியும் காலம் வந்தால்... 
புதைக்கும் மண்ணில் நான் புழுதியாவேன்....

2011/05/30

 கண்ணாடி பூ ஒன்று

   சிதறியது இன்று

     முற்க்கள் இதயத்தை
      கீறுவது நியாயமா
 
சிதறியது என் கனவல்ல
என் உயிர் அல்லவா    
உன்னை மறப்பதற்கு 
மருந்து என்ன சொல்
         மரணம் கூட சம்மதமே.......


உன் வார்த்தைகளை
கண்டு....
புன்னகைத்த விழிகள்
மீண்டும் நனைந்தது
உன் பிரிவுகளை 
கண்டு....அதனால்
இதயத்துக்கு இன்பம்
உன் நினைவுகளால்.....
விழிகளுக்கு சோகம் 
என் பார்வைகளில்.....

2011/05/29


அன்பே நீ என்னை உந்தன் அடிமையாக்கினாய்
உன் கண்ணலே பேசி நீயும் காதல் சொல்கிறாய்


நெஞ்சுக்குள் நீ வந்து ஊஞ்சல் ஆடினாய், 

என் உயிருக்குள் ஏன் வந்து இம்சை செய்கிறாய் 

என்னை காதலித்த நீ.! 

ஏன் இதய வாசலை.! 
பூட்டிவிட்டாய் ......!!! 
உன் இதயத்தில் குடியிருப்பது.! 
உனக்கு பிடிக்கவில்லையா??? 
காதல இன்பத்தை விட.! 
துன்பத்தையே காதலிக்கின்றது...!!! 
இதை நீயும் உணர்வாயோ இல்லையோ...!! 
அது உன் இதயத்தை பொறுத்தது.

2011/05/21


கண்ணில் ஒரு மின்னல்

முகத்தில் ஒரு சிரிப்பு 
சிரிப்பில் ஒரு பாசம்
பாசத்தில் ஒரு நேசம்


உனக்குள்ளே நான்
எனக்குள்ளே நீ
நமக்குள்ளே நாம்
சொல்லும்
கவிதை நட்பு..!

2011/05/20

கண்ணை மூடிக்கொண்டாலும் மறையாதே...
தூரல் வந்தால் கோலங்கள் அழியும்

காலம் வந்தால் கல்வெட்டும் அழியும்
என்றும் பெண்ணே என் காதல் அழியாதே...

உன் காதல் என்னிடம் இல்லை
நான் கரைக்க நினைக்கிறேன் கல்லை.....

நீ சொல்லும் ஒரு வார்த்தை
அதற்காக நான் காத்திருப்பேன்..........!!!!

2011/05/18

கண்ணை திறந்தாலும் மறந்தாலும் 
தெரியுது உந்தன் உருவம் உயிர் உருவம் 
இதயம் அதை வரையும்....

கொஞ்சி சிரித்தாலும் தவிர்த்தாலும் 
இனிக்குது இந்த பருவம் .......

அலை அலையாய் ஆசைகளை 
அடுக்கடுக்காய் அனுப்புகிறாய் 
கொஞ்சம் ரசித்து கொஞ்சம் ருசித்து 
கொஞ்சி அணைத்து காற்றி மிதக்க......

என் இதயச்சிரிப்பு 
சிரித்து கொண்டு இருக்கின்றேன்
கண்களில் கண்ணீருடன் !!!


நீ என்னை விட்டு சென்ற கணம் முதல்
நிற்க துடிக்கும் என் இதயத்தை கண்டு !!!