2010/05/29



என் முகத்தை பாத்தேன் 
உன் கண்களில்...!
என் புன்னகையை பாத்தேன் 
உன் மகிழ்ச்சியில்...!
என் குரலை கேட்டேன்
உன் பேச்சில்...!
என் மற்றதை பாத்தேன் 
உன் அன்பில்...!இன்று
என்னையே பாத்தேன் 
உன் இதயத்தில்...!!!

2010/05/28

உன்னைப் பார்த்து முதன்முதலாய் 
வெட்கம் வந்தபோது

காதல் வந்ததை உணர்ந்தேன்!

உன்னிடம் காதலைச் சொல்ல வந்தாலோ
மறுபடி வெட்கம்தான் வருகிறது!
இன்பத்துள் இன்பமா?
துன்பத்துள் துன்பமா?
காதல்.
காதலின்பம் – மலை.
பிரிவுத்துயர் – கடல்.
அதிகமெது,
உயரமா? ஆழமா?
காதல் - கடல்.
நீந்தினால் கரையேரலாம்.
பிரிவு - கரையில்லாத கடல்.
நீந்தலாம்…அவ்வளவுதான்!!!!!!!!!!!!!! 

2010/05/26

என் விழியில் விழுந்தவளே!


உன்னைத் துளியும் மறந்தால்
என் துடிப்பும் நின்று விடும்

உன்னுடன் கழியும்
சில மணித்துளிகள்
வானில் பறக்கிறேன்
சிறகில்லாமலே..



என் இரு விழிகளிலும்
கனவுகளை விதைக்கும்
உன் விழிகளுடன்
யுத்தம் செய்தே
எனது இரவுகள் கழிகின்றன..

நீண்டு கொண்டே போகும்
உன் நினைவுகளில்
கால் பதிக்க முடியாமல்
தடுமாறி போவதால்

என் இதயத்தை தீண்டும்
உனது பார்வை ஒன்றை
திருடி கொண்டு
உன் வருகை ஒன்றுக்காக
வாசல் பார்த்தே காத்திருக்கிறேன்!


உன் ஒரப் பார்வையில் - என்
உயிரோட்டத்தை நிறுத்தியவளே!

ஒளித்து வைத்த இரகசியங்களை
அம்பலபடுத்த செய்கிறாயடி.

உன் அழகின் ஆணவம்
என் ஆண்மைக்கு சவால் விடுகிறது.
பூவிதழின் மென்மையான புன்னகை
புவியின் சுழலை நிறுத்துகிறது.

தென்றலினும் மெல்லியதான்
 உன் சுவரிசம் - என்
சுவாசத்தை மூர்ச்சையடைய செய்கிறது.

"செல்"லரித்த பேச்சுகள் -
நீ பேசும் பொழுது மட்டும்
சிலிர்த்தே கேட்கிறேன்!

மழைத்துளிச் சாரல்
என் மீது படர்வதாய் உணர...
சாத்தானின் சத்தம் - காதோரத்தில்
"சனியனே! இன்னும் என்ன தூக்கம்..??"

தந்தையின் அறைகூவல்...
விடியலை உணர்கிறேன்!

கனா கண்டேனடி தோழி.......!!!!!
-


மாயையிலே வாழ்வது தான்
உந்தன் விருப்பு - அதை

மாறி மாறி உரைத்ததாலே

என்னில் வெறுப்பு

பந்த பாசம் அறுப்பதுவோ
உனக்குப் புதுசு
பாழாப் போன கதைகள் நான்கு
இருக்குப் பழசு

அவன் சிரித்த நாட்களிலே
நீயும் சிரித்தாய் - இருந்தும்
நீயழுத நாட்களிலே
நானே துடைத்தேன்

காதறுந்த ஊசியவன்
கானம் படித்தான்
கானமின்று கானலாக
நீயும் தனித்தாய்

பாடல் ஒன்று
இராகம் இரண்டு பாட்டிற்கிருக்கலாம்
பாவை கணவன் மாண்ட பின்பே
மீண்டும் மணக்கலாம்

மீண்டும் நீயோ மணப்பதற்கு
என்னை வெறுக்கிறாய்
பிரிவு என்ற நோயை ஏற்றி
உயிரைச் சிதைக்கிறாய்

கண்டதிரு மேனியெந்தன்
கண்கள் குத்துதே
பாதகமே புரிந்தது போல்
நெஞ்சம் பத்துதே

காத்திருந்து காக்கவைத்துக்
கொண்ட காதலே - இன்று
கானகத்தில் கண்ணைக் கட்டி
தவிக்க விட்டதே

காதலென்ன சாதலென்ன
இரண்டும் ஒன்று தான்
கனிந்தவுடன் வெட்டப்படும்
வாழைக் கன்று தான் 

இதயத்தில் படபடத்த பட்டாம்பூச்சி
இப்போது இமைகளையும் பற்றி கொண்டது.

வழி குழிஎல்லாம் மழை துளி நிரப்ப மனமோ
உன் மனகுழி தேடி நிரம்பி வழிந்தது.

தொண்டர்களுக்கு நடுவே சில
குண்டர்களும் இருப்பார்கள் தானே - உன்
இன்னொரு தோழி ஒருத்தி குடையோடு வந்து
குடைக்குள் வரச்சொல்லி வாதாடினாள்.

நீ குதித்து ஓடி குடைக்குள் நுழைகையில்
குடைக்கம்பி ஒன்று உன்னை செல்லமாய்
குட்டி வைத்து வராதே என்றது.

நீ குடையை  கோபித்து கொண்டு முகம் சுழிக்கயில்
குழர்கற்று ஒன்று சுழன்று அடித்து  உன்
கார்குழல் இரண்டை கடன் வாங்கி போனது.


கவிதையாய் மிளிர்கிறாய்

காற்றில் தென்றலாய் உலவுகின்றாய்

கற்பனைகள் அலை மோதும்
கடலாய் தவழ்கின்றாய்

காதலின் மெல்லிசையாய்
கருத்துக்களின் கருவிடமாய்
கண்மணி நீ உள்ளாய்
காலத்தின் பெட்டகமாய்

கவியான வாழ்வு தன்னில்
கலக்கம் வேண்டாமடி
கரை தன்னை நீந்திடுவாய்
கண்ணீர் கூடாதடி

வலியின் கொடுமை புரிந்து விட்டால்
வாழ்வின் அர்த்தம் விளங்குமடி
வளர்ந்து விடடி பெண்ணே நீ..
வானம் என்றும் அருகிலடி.

2010/05/22



உன் நினைவே போதுமடி 
மனம் மயங்கும் மெய் மறக்கும் 
புது உலகின் வழி தெரியும் 
பொன் விளக்கே தீபமே........
ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப் போல் 


ஓரழகைக் கண்டதில்லையே
காவியத்தின் நாயகி கற்பனையில் ஊர்வசி 
கண்களுக்கு விளைந்த மாங்கனி 
காதலுக்கு வளர்ந்த பூங்கொடி .......!!!!!
M.Neshan

2010/05/11



யாரையும் திரும்பி பார்க்கவைக்கும்
அழகிகளை பார்த்திருக்கிறேன்
பார்க்கவைத்துக்கொண்டே 
இருக்கும் அழகி நீ
பெயரளவில் அழகிகளை பார்த்ததுண்டு

உன்னைப்போல் பேரழகியை பார்த்தது

இதுதான் முதல்முறை
அழகாய் இருக்கின்றன

என்றுகூறும் அனைத்தும்

உன்னைப்போல் அழகில்லை
ஒருவேளை நீ மட்டும்தான் 
அழகோ என்னவோ
எழுத்துகள் கூட உன்னைசேர்ந்தவுடன்

அழகாய் மாறியமாயம் உன்.. 
அழகிற்கேவுண்டு

உன் பெயர்எழுத்தில் உள்ள
எழுத்துக்களையெல்லாம் தனியாக
எழுதிப்பார் உனக்கே புரியும்
அழகு புத்துணர்வு தரும்

உன்னைபார்த்தபின் நான்

கண்ட உண்மை
எல்லாவற்றிக்கும் வரையறையுண்டு

உன் அழகிற்கு மட்டும்

எந்த வரையறையுமில்லை
உன் அழகிற்கு அருகில்

எந்த அழகைகொண்டுவந்தாலும்

அழகில்லாமல் போய்விடுகிறது
உன்னை நான் காதலிப்பதலோ

என்னவோ என் காதல்கூட

அழகாய் தெரிவதில்லையனக்கு
அத்தனை அழகாய்

ஒரு அழகு நீ......!!!!!

காதலிக்க பழகலாம் என்றேன்


பழகிப் பார்த்து காதலிக்கலாம் என்றாய்

காதலால் பழக்கம் உண்டு 
பழக்கத்தால் காதலுண்டோ?

கேள்விக்குறி மனதில்
குழந்தையின் கண்ணாடி பருவம் போல்
உன்னில் என்னை பார்த்து உணர்ந்த
காதல் பருவத்தில் இனி ஒரு முறை

அந்த அரிதான நொடிகள்
நிகழப் போவதில்லை
சிரித்துப் பழகும் குழந்தை போலே
நான் காதலிக்க பழகும் குழந்தை

அழுது அடம் பிடிக்கும் என் 
அகபாவத்தை புறத்தில் பாவனை
செய்வது குழந்தைப் போல்
என்னால் இயலாது
நீ சொல்லும் பழக்கம்
என் காதலுக்கு இல்லை
நான் உணர்த்தும் காதல் 
உன் பழக்கத்தில் இல்லை

எனக்கான காதலும் உனக்கான பழக்கமும் 
ஒரே வழித் தடத்தில் 
நிகழப் போகும் நொடிகள்
நீ குழந்தையாய் இருப்பாய் 
என்னைப்போல் காதலில்



வெள்ளைப் புன்னகையால்
என் மனதில்
கனவுகளின் நிறம் ஊற்றிய
சின்னப் புறாவே.
புன்னகை மின்னலால்
என்
இதய வானத்தில்
வெள்ளை வேரிறக்கியவள்
நீ.
இதயத்தின் ஒருபாகம்
இருண்டு தான் கிடந்தது
உன்
வெள்ளிக் கொலுசுகளின்
வெள்ளை மணிகள் தான்
அதை
துலக்கிவைத்துப் போயின.
தரை மோதும் முன்


முகம் மோதும்
ஓர்
பனித்துகளின் மென்மை
உன் புன்னகையில்.
நிறம் மாறா
அடர் வெண்
மேகத்தின் மென்மை
உன் கன்னங்களில்.


கவலைக் குவியலில்
கூட
வெள்ளைப் பூக்களை
விளைவிக்க
உன்னால் எப்படி முடிகிறது ?