2010/05/07

ஒரு துளி கண்ணீராக..

நான் இருந்தால் ...
உன் கன்னம் தழுவி...
உன் உதட்டை ....
சென்று அடைந்திருப்பேன்.....

என் கண்ணில் கண்ணீராக....!
நீ இருந்தால் நான் என்றும்....
அழ மாட்டேன்.....!
என் கண்ணில் இருந்து.....
உன்னை கீழே.........
விழ விடமாட்டேன்.....

உன் சுவாசக் காற்றாய்....
நான் இருந்தால் .....
உன் சுவாசமாக ....
உன் உள்ளே என்றும்.....
உன்னுடன் கலந்திருப்பேன்....

என் சுவாசக் காற்றாய் ....!!!
நீ இருந்தால்.....
உள் இழுத்த மூச்சை.....
வெளியில் விட மாட்டேன்.....!!
வெளியே விட்டு உன்னை.....
தொலைக்க மாட்டேன்.........!!!!
M.Neshan

0 comments:

Post a Comment