2010/05/07


நிலவில் உதித்த
மஞ்சப்பூக்களாய் பூத்திடவே-உன்
மடியில் கிடந்தேனே

மடிசாய்ந்து முகம்பார்த்தேன்-என்
மனதுக்குள் 
மஞ்சம்கொண்ட உன் நினைவுகள் 

மரகத வீணை மீட்டிடவே.....!
அன்பைச்சொரிந்து அனுதினமும்
அலைபாய விடுகின்றாய்

அந்திவானம் சிவப்பதுபோல்
அதரம் சிவக்க வைக்கின்றாய்......! 
குளிர்கால இரவுகளில்

கோடைவெப்பம் உன்னாலே
வெயில்கால தருணங்களில்
குளிரடிக்குது தன்னாலே.....! 

நினைவுகளின் தாக்கத்தால்
நித்தம் நித்தம் வேகின்றேன்-என்
உணர்வுகள் மரித்தபின்னும்

உன்நினைவோடு நானிருக்க.....! 
ஒவ்வொரு மணித்துளியும்
ஓராயிரம் ஒளிக்கதிராய்

நிலையாக நிலைத்திருக்க
ஒவ்வொரு நொடியும் 
உருகி உருகி வேண்டுகிறேன்.......!!!!
M.Neshan

0 comments:

Post a Comment