2010/05/08

தன்னையே மறக்கும்காதல்
தவறுக்குத் தூண்டும் காதல்
உன்னையே அழிக்கும் காதல்
உயிரையே உருக்கும் காதல்

பொய் சொல்ல வைக்கும் காதல்
போதையை ஊட்டும் காதல்
வெயிலையே நிலவாய் மாற்றி
வேடிக்கை காட்டும் காதல

உறக்கத்தைப் பறிக்கும் காதல்
உள்ளத்தைக் கசக்கும் காதல்
உலகத்தைத் தனக்குள் வைத்து
ஊஞ்சலாய் ஆட்டும் காதல்

கலகத்தை உண்டு பண்ணும்
கண்ணீரில் குளிக்க வைக்கும்
கற்பனைக் கவிஞனாக்கும்
காலனைத் துணைக்கழைக்கும்

வாழ்வையே முடித்து வைக்கும்
வைரத்தை மனதிற் கொடுக்கும்
ஏழையாய் இருந்தபோதும்
எண்ணத்தில் அரசனாக்கும்.

0 comments:

Post a Comment