2010/07/23

அயல் மொழியையும்
 எளிதில் கற்றுக்கொன்டேன்.
 கலாச்சார உடையிலிருந்து 
நாகரீக உடைக்கு மாறினேன். 


 நம் காதலை கவிதை 
எழுதி கவிஞன் ஆனேன்.
 அலைபேசியை 
மணிக்கணக்கில் உபயோகித்தேன். 


 உன்னைப்பற்றியே எப்போதும் மனதில் 
நினைத்துக் கொண்டிருந்தேன். 
உன்னோடு சிரித்து பேசியே
 என் பொன்னான காலங்களை வீணடித்தேன்.


 உன்னுடைய வேலையையும்
 நானே பார்த்துக்கொண்டேன்.
நண்பர்களோடு நேரம் செலவழிப்பதைவிட‌
 உன்னோடு இருக்க‌ விரும்பினேன்.


 உன்னோடு பிற‌ந்த‌ நாளுக்கு
 ப‌ரிசு வாங்க‌ தோழியை அழைத்து சென்றேன். 
கார‌ணமே இல்லாம‌ல் ப‌ல‌முறை
 தின‌மும் தொலைபேசியில் தொட‌ர்பு கொண்டேன். 


 உன் ஆடையையும் 
அழகினையும் வ‌ர்ணித்து பேசினேன். 
நீ கேட்காம‌லேயே நான் செய்த‌
 சேட்டைக‌ளை உன்னிட‌ம் கூறினேன். 


 இவையனைத்தும்
 உன்னைக் காதலித்ததால்......!!

2010/06/30

சிறகுகள் விரியும்


சோகத்திலும்
சுகங்கள் தோன்றும்
தனிமையும்
துணையாய் தெரியும்
பிரிவிலும்
பாசம் புரியும்
தொலைவில் இருந்தும்
நெருக்கமாய் உணரும்
நிஜங்கள் கசக்கும் நேரத்திலும்
நினைவுகள் இனிக்கும்

அழகை மட்டுமல்ல
கண்ணீரையும் 

கண்கள் ருசிகட்டும்.

சுகம் மட்டுமல்ல

சோகமும்
வாழ்வில் உணரபடட்டும். 

வலி அறிந்தால் 
உணர முடியும் 
சுகம் என்னும் சுவையை...
துன்பம் வந்தால்
ரசிக்க தெரியும்
வாழ்க்கையின் இனிமையை...இன்பம் 
மட்டுமே வாழ்வானால்
அதில் ஏது இன்பம் 
சுகம் கண்ட விழி
ஓர் நாள்
சோகமும் பெற்று தெளி..

2010/06/25






பௌர்ணமி நிலவைப் பார்த்தேன்;
உன் முகத்தை கண்டு ரசித்தேன்.
அதன் பின்னணியில் கார்மேகத்தை பார்த்தேன்;
உன் கூந்தல் கண்டு ரசித்தேன்.


மின்னல் பளிச்சிடுவதை பார்த்தேன்;
உன் விழிகளை கண்டு ரசித்தேன்.
தோட்டத்து ரோஜா மலர்வதை பார்த்தேன்;


உன் இதழ் கண்டு ரசித்தேன்.
மலர் மனம் வீசுவதை நுகர்ந்தேன்;
அதில் உன் வாசம் உணர்ந்து கிறங்கினேன்.


ஒன்று சொல் பெண்ணே,
உன்னை மனதை நான் பார்க்கையில்
அதில் என்னைக் கண்கொண்டு ரசிப்பேனா..?


நிஜங்கள் என்னை
நேர்காணல் நடத்தும்போது
நேற்றைய நிழலாய்
நீ திசைகாட்டி செல்கிறாய்!


நீயா இது….
என் முன் நிற்கும் நீயா இது?
குளக்கரை பாசிகளாய் என்னுள்
படர்ந்து பரந்திருக்கும்
நீயில்லை நீ…….!


கருணை வழிந்த கண்களில்
கொடூரம் சிந்தும்
நீயில்லை நீ…….!


அளவிலா அன்புடையவனெயென நானும்
அதிகரிக்கும் அன்புகொண்டவளெயென நீயும்
நம்மால் சித்தரிக்கப்பட்ட
ஒரு மழைகாலத்தில் என்னுடனிருந்த
நீயில்லை நீ………..!

2010/06/04

உனக்கும் எனக்குமான

காதலைப் பிரிக்க

காதலால் கூட
முடியவில்லை!

எதிர்ப்புகளைச் சுருட்டி
வெற்றிச் சரித்திரமானது
நம் காதல்!
நினைத்த பொழுது

பாயை விரிக்கும்
உரிமை பெற்ற நேரம்...
நம் காதல்........

2010/06/02



தூறலாய் ஆரம்பித்து
பெரும் மழையாய் பொழிகிறது
உன் உண்மையான ஸ்நேகங்கள்!
என் கற்பனைச் சதுக்கத்தில்
பதுக்கி வைக்கப்பட்டிருந்த
கனவுகள் எல்லாம்
அத்து மீறிப் பிரவேசம் பெற்றது
எல்லாம் உன்னைக் கண்ட பின்புதான்!
ஓ!…என் கண்ணுக்குள்
ஒளியுமிழும்
ஒரு வண்ணப் பூச்சியாய் நீ!
என் நெஞ்சுக்குள் இராகம் பாடும்
ஒரு சின்னப் பூங்குயிலாய் நீ! ம்ம்…
நீயும்
உன் நினைவுகளும்
நிஜமாய் என்னுள்
நிறைந்திருக்கும்
ஆத்ம திருப்தியோடு
நம் நேசிப்புக் காலங்கள்
நித்தமும் தொடர…
பனித்துளிபோல்
பரிசுத்தமான உன் அன்பில் இதுவரை
நனைந்த நினைவுகளோடும்…
இனி நனையப் போகும்
ஈர நினைவுகளோடும்…
நனைந்து கொண்டிருக்கிறது
இந்த மனசு!



காதலிக்க தெரியாமலா
இத்தனை நாள்


காத்துக் கொண்டிருந்தேன்.
என்னுள் வழிய வழிய
பொங்கும் காதலை தாங்க
இந்த அண்டம் முழுவதும்
கூட போதாதே !


யாரிடம் கொட்டுவது
என்று தானே
காத்துக் கொண்டிருந்தேன்.
உன் கண்களை கண்டேன்,
காதலில் விழுந்தேன்..

2010/05/29



என் முகத்தை பாத்தேன் 
உன் கண்களில்...!
என் புன்னகையை பாத்தேன் 
உன் மகிழ்ச்சியில்...!
என் குரலை கேட்டேன்
உன் பேச்சில்...!
என் மற்றதை பாத்தேன் 
உன் அன்பில்...!இன்று
என்னையே பாத்தேன் 
உன் இதயத்தில்...!!!

2010/05/28

உன்னைப் பார்த்து முதன்முதலாய் 
வெட்கம் வந்தபோது

காதல் வந்ததை உணர்ந்தேன்!

உன்னிடம் காதலைச் சொல்ல வந்தாலோ
மறுபடி வெட்கம்தான் வருகிறது!
இன்பத்துள் இன்பமா?
துன்பத்துள் துன்பமா?
காதல்.
காதலின்பம் – மலை.
பிரிவுத்துயர் – கடல்.
அதிகமெது,
உயரமா? ஆழமா?
காதல் - கடல்.
நீந்தினால் கரையேரலாம்.
பிரிவு - கரையில்லாத கடல்.
நீந்தலாம்…அவ்வளவுதான்!!!!!!!!!!!!!! 

2010/05/26

என் விழியில் விழுந்தவளே!


உன்னைத் துளியும் மறந்தால்
என் துடிப்பும் நின்று விடும்

உன்னுடன் கழியும்
சில மணித்துளிகள்
வானில் பறக்கிறேன்
சிறகில்லாமலே..



என் இரு விழிகளிலும்
கனவுகளை விதைக்கும்
உன் விழிகளுடன்
யுத்தம் செய்தே
எனது இரவுகள் கழிகின்றன..

நீண்டு கொண்டே போகும்
உன் நினைவுகளில்
கால் பதிக்க முடியாமல்
தடுமாறி போவதால்

என் இதயத்தை தீண்டும்
உனது பார்வை ஒன்றை
திருடி கொண்டு
உன் வருகை ஒன்றுக்காக
வாசல் பார்த்தே காத்திருக்கிறேன்!


உன் ஒரப் பார்வையில் - என்
உயிரோட்டத்தை நிறுத்தியவளே!

ஒளித்து வைத்த இரகசியங்களை
அம்பலபடுத்த செய்கிறாயடி.

உன் அழகின் ஆணவம்
என் ஆண்மைக்கு சவால் விடுகிறது.
பூவிதழின் மென்மையான புன்னகை
புவியின் சுழலை நிறுத்துகிறது.

தென்றலினும் மெல்லியதான்
 உன் சுவரிசம் - என்
சுவாசத்தை மூர்ச்சையடைய செய்கிறது.

"செல்"லரித்த பேச்சுகள் -
நீ பேசும் பொழுது மட்டும்
சிலிர்த்தே கேட்கிறேன்!

மழைத்துளிச் சாரல்
என் மீது படர்வதாய் உணர...
சாத்தானின் சத்தம் - காதோரத்தில்
"சனியனே! இன்னும் என்ன தூக்கம்..??"

தந்தையின் அறைகூவல்...
விடியலை உணர்கிறேன்!

கனா கண்டேனடி தோழி.......!!!!!
-


மாயையிலே வாழ்வது தான்
உந்தன் விருப்பு - அதை

மாறி மாறி உரைத்ததாலே

என்னில் வெறுப்பு

பந்த பாசம் அறுப்பதுவோ
உனக்குப் புதுசு
பாழாப் போன கதைகள் நான்கு
இருக்குப் பழசு

அவன் சிரித்த நாட்களிலே
நீயும் சிரித்தாய் - இருந்தும்
நீயழுத நாட்களிலே
நானே துடைத்தேன்

காதறுந்த ஊசியவன்
கானம் படித்தான்
கானமின்று கானலாக
நீயும் தனித்தாய்

பாடல் ஒன்று
இராகம் இரண்டு பாட்டிற்கிருக்கலாம்
பாவை கணவன் மாண்ட பின்பே
மீண்டும் மணக்கலாம்

மீண்டும் நீயோ மணப்பதற்கு
என்னை வெறுக்கிறாய்
பிரிவு என்ற நோயை ஏற்றி
உயிரைச் சிதைக்கிறாய்

கண்டதிரு மேனியெந்தன்
கண்கள் குத்துதே
பாதகமே புரிந்தது போல்
நெஞ்சம் பத்துதே

காத்திருந்து காக்கவைத்துக்
கொண்ட காதலே - இன்று
கானகத்தில் கண்ணைக் கட்டி
தவிக்க விட்டதே

காதலென்ன சாதலென்ன
இரண்டும் ஒன்று தான்
கனிந்தவுடன் வெட்டப்படும்
வாழைக் கன்று தான் 

இதயத்தில் படபடத்த பட்டாம்பூச்சி
இப்போது இமைகளையும் பற்றி கொண்டது.

வழி குழிஎல்லாம் மழை துளி நிரப்ப மனமோ
உன் மனகுழி தேடி நிரம்பி வழிந்தது.

தொண்டர்களுக்கு நடுவே சில
குண்டர்களும் இருப்பார்கள் தானே - உன்
இன்னொரு தோழி ஒருத்தி குடையோடு வந்து
குடைக்குள் வரச்சொல்லி வாதாடினாள்.

நீ குதித்து ஓடி குடைக்குள் நுழைகையில்
குடைக்கம்பி ஒன்று உன்னை செல்லமாய்
குட்டி வைத்து வராதே என்றது.

நீ குடையை  கோபித்து கொண்டு முகம் சுழிக்கயில்
குழர்கற்று ஒன்று சுழன்று அடித்து  உன்
கார்குழல் இரண்டை கடன் வாங்கி போனது.